சுவாமி விவேகனந்தரின் பொன்மொழிகள்
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.உன்னை வலிமை படைத்தவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிறாய்.
நீங்கள் கடவுளின் குழந்தைகள் அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள் புனிதமும் புராணத்துவமும் பெற்றவர்கள்.
உன்னால் சாதிக்க முடியாத காரியம் ஒன்று இருப்பதாக ஒருபோதும் எண்ணாதே.
பலமே வாழ்வு பலவீனமே மரணம்.
தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால் ,தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைத்தே தீரும்
உனக்கு தேவையான எல்லா வலிமையையும் உதவியும் உனக்குள் உள்ளன.
உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒரு ஆயிரம் தவறு செய்தால் லட்ச்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுசெய்வான்.
தூய்மை,பொறுமை,விடாமுயற்சி ஆகிய இந்த மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்.
எழுந்திருங்கள் விழித்துக்கொள்ளுங்கள் இனியும் தூங்க வேண்டாம்.


